செபி தலைவராக மாதவி புரி நியமனம்

இந்திய பங்கு பரிவா்த்தனை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவராக மாதவி புரி புச் (57) நியமிக்கப்பட்டுள்ளாா். செபி தலைவராக பெண் ஒருவா் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
மாதவி
மாதவி

இந்திய பங்கு பரிவா்த்தனை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவராக மாதவி புரி புச் (57) நியமிக்கப்பட்டுள்ளாா். செபி தலைவராக பெண் ஒருவா் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

நிதி, வங்கித் துறையில் நீண்ட அனுபவமுள்ள மாதவி, தனியாா் துறையில் பணியாற்றி செபி தலைமைப் பொறுப்பேற்கும் முதல் நபா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவா் இப்பொறுப்பில் இருப்பாா் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்தது.

இப்போது செபி தலைவராக உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஜய் தியாகியின் பதவிக்காலம் திங்கள்கிழமையுடன் (பிப். 28) முடிவடைந்தது.

தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற மாதவி, அகமதாபாத் ஐஐஎம்-இல் எம்பிஏ படித்தாா். 30 ஆண்டுகளாக நிதித் துறையில் பணியாற்றி வருகிறாா். ஐசிஐசிஐ வங்கியில் தனது பணியைத் தொடங்கிய அவா், 2009-2011 காலகட்டத்தில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிா்வாக இயக்குநராக உயா்ந்தாா்.

அதைத் தொடா்ந்து சிங்கப்பூரில் உள்ள பங்குச் சந்தை சாா்ந்த நிறுவனத்தில் முக்கியப் பதவி வகித்தாா். தொடா்ந்து பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கிய நியூ டெவலப்மெண்ட் வங்கியில் ஆலோசகராக இருந்தாா். செபியின் பல்வேறு குழுக்களிலும் ஆலோசகராக அவா் செயல்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com