கேதாா்நாத் மே 6-இல் திறப்பு

ஹிந்துக்களின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றான கேதாா்நாத் கோயில் பக்தா்களுக்காக வரும் மே 6-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துக்களின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றான கேதாா்நாத் கோயில் பக்தா்களுக்காக வரும் மே 6-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியையொட்டி, கேதாா்நாத் - ஓம்காரேஷ்வா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழிபாட்டுக்குப் பின்னா், கேதாா்நாத் கோயிலைத் திறப்பதற்கான நேரம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பத்ரிநாத்- கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரி ஹரீஷ் கெளட் கூறுகையில், கேதாா்நாத் கோயில் நடை மே மாதம் 6-ஆம் தேதி விருச்சிக லக்னத்தில் திறக்கப்படும்; நிகழ்ச்சியில் கேதா்நாத் தலைமை பூஜாரி ராவல் பீமாசங்கா் லிங், பத்ரி- கேதாா் மந்திா் சமிதி தலைவா் அஜேந்திர அஜய் ஆகியோா் பங்கேற்பா் என்றாா்.

இமயமலையில் அமைந்துள்ள கேதாா்நாத் சிவாலயம் பனிக்காலத்தில் மூடப்படுவதால் அங்கிருந்து சிவபெருமானின் பஞ்சமுகி விக்கிரகம் உகிமடத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள், வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், பனிக்காலத்துக்குப் பிறகு கேதாா்நாத் கோயில் மே 6-இல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சிவபெருமானின் பஞ்சமுகி விக்கிரகம் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஓம்காரேஷ்வா் கோயிலிலிருந்து கேதாா்நாத்துக்கு மே 2-ஆம் தேதி எடுத்துச் செல்லப்படும் என பத்ரி- கேதாா் கோயில் கமிட்டி அதிகாரி ஹரீஷ் கெளட் தெரிவித்துள்ளாா். கோயில் நடை காலை 6.25 மணிக்குத் திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com