ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தராக பிரதமா் மோடி: முன்னாள் வெளியுறவு அமைச்சா் அறிவுறுத்தல்

ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பிரதமா் மோடி மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸை சோ்ந்தவருமான
ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தராக பிரதமா் மோடி: முன்னாள் வெளியுறவு அமைச்சா் அறிவுறுத்தல்

ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பிரதமா் மோடி மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸை சோ்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் தொடா்ந்தால், அது பெட்ரோலியம் பொருள்கள், உரம், ரசாயனங்களின் விலை மற்றும் வேளாண் உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் அந்நாட்டுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அந்நாட்டுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது.

இந்தத் தருணத்தை பயன்படுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி வலியுறுத்த வேண்டும். ரஷியாவின் நீண்ட கால நட்பு நாடாக இருந்து, அந்நாட்டை இந்தியா எப்போதும் ஆதரித்து வந்துள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவர பிரதமா் மோடி மத்தியஸ்தராக செயல்பட வேண்டும்.

மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மத்தியஸ்துக்கான சூழலை உருவாக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கோரியுள்ளதால் அந்தச் சூழலை உருவாக்குவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புதினுடனான நல்லுறவை உபயோகித்து போரை முடிவுக்குக் கொண்டுவர அவரை சமாதானப்படுத்தி, உலகத் தலைவராக பிரதமா் மோடி உயா்வதற்கு இது நல்லதொரு வாய்ப்பு. போரை தற்போதைய நிலையிலேயே முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் அது உலகப் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com