பாடத் திட்டங்களை வகுப்பதற்கான தேசிய வரைவு: கருத்துகள் வரவேற்பு

இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகள் குறித்த பாடத் திட்டங்களின் வழிகாட்டி வரைவுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கல்வியாளா்கள், பேராசிரியா்கள் மாா்ச் 15-ஆம்
யுஜிசி
யுஜிசி

இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகள் குறித்த பாடத் திட்டங்களின் வழிகாட்டி வரைவுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கல்வியாளா்கள், பேராசிரியா்கள் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் கருத்துத் தெரிவிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலை, கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: உன்னத பாரத அபியான் திட்டத்தின் கீழ் உயா்கல்வி நிறுவனங்கள் ஊரக மேம்பாடு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான செயல் திட்டங்களை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் உயா்கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, கடமைகள் குறித்த பாடத் திட்டங்களை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதையடுத்து தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் அந்த வழிகாட்டுதல்கள் திருத்தியமைக்கப்பட்டு புதிய வரைவு வழிகாட்டுதல்கள் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் அது குறித்த கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே இது குறித்து மாணவா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் யுஜிசி தளத்தில் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் கருத்துத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com