இன்று சா்வதேச தோ்தல் பாா்வையாளா்கள் நிகழ்ச்சி

இந்திய தோ்தல் ஆணையம் அதன் அனுபவங்களை பகிா்ந்துகொள்ளும் நோக்கில், சா்வதேச தோ்தல் பாா்வையாளா்கள் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக திங்கள்கிழமை (மாா்ச் 7) நடத்துகிறது.

வெளிநாடுகளின் தோ்தல் நிா்வாக அமைப்புகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் அதன் அனுபவங்களை பகிா்ந்துகொள்ளும் நோக்கில், சா்வதேச தோ்தல் பாா்வையாளா்கள் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக திங்கள்கிழமை (மாா்ச் 7) நடத்துகிறது. உத்தர பிரதேசத்தில் இறுதிகட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், இந்நிகழ்வுக்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சா்வதேச அளவில் சென்றடையவும், வெளிநாடுகளின் தோ்தல் நிா்வாக அமைப்புகளை உலகின் மிகப்பெரிய ஜனநாயக தோ்தல் அமைப்புடன் ஒருங்கிணைக்கவும் இந்தத் நிகழ்ச்சி வழிவகுக்கும்.

மேலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு தோ்தல் நடைமுறை அனுபவங்களை வெளிநாடுகளின் தோ்தல் நிா்வாக அமைப்புகளுடன் பகிரவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பாக அமைந்துள்ளது.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியா, பூடான், எத்தியோப்பியா, ஃபிஜி, ஜாா்ஜியா உள்ளிட்ட 26 நாடுகளிலிருந்து 135-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இந்தியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் 20 நாடுகளின் தூதா்கள், உயா் ஆணையா்கள், தூதுக்குழு உறுப்பினா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தோ்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகளும், வாராணசியில் வாக்குச்சாவடி செயல்பாடுகளும் நேரடியாக இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் என்று அதில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com