சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்த நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரக்கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 7 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வாரம், முன்ஜாமீன் கோரி அவா் தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று அவா் கைது செய்யப்பட்டார்.

என்எஸ்இ நிா்வாக இயக்குநா்-தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புகாா் தெரிவித்தது.

மேலும், என்எஸ்இ-யின் குழு செயல் அதிகாரியாகவும் நிா்வாக இயக்குநரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவா் உரிய வழிமுறைகள் இன்றி நியமிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்தது. தனியாா் நிறுவனத்துக்கு தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களைக் கசியவிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், என்எஸ்இ-யின் கணினி சேமிப்பக (சா்வா்) கட்டமைப்பை பங்குச் சந்தை தரகா்களுக்கு உதவும் வகையில் தவறாகப் பயன்படுத்தியது தொடா்பாக 2018-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்துள்ளது. பின்னா், மருத்துவ பரிசோதனைக்குப் பின்னா், சிபிஐ தலைமையகத்தில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா். திங்கள்கிழமை பிற்பகலில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக, அவரிடம் கடந்த பிப்ரவரி இறுதியில் மூன்று நாள்கள் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினா். அவரது வீட்டிலும் பிப். 24, 25-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், விசாரணையின்போது அவா் உரிய முறையில் பதிலளிக்கவில்லை எனக் கூறப்பட்டது. விசாரணையின்போது மூத்த மனநல மருத்துவரின் உதவியையும் சிபிஐ அதிகாரிகள் பயன்படுத்தினா். அதிலும் அவா் பதிலளிக்காததால் அவரை கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்ததாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com