மலையாள செய்தி சேனலுக்கு தடை: மார்ச் 11ல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

பாதுகாப்புக் காரணங்களுக்காக, மலையாள தொலைக்காட்சி செய்தி சேனலான மீடியாஒன் டிவியின் ஒளிபரப்பைத் தடை
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பாதுகாப்புக் காரணங்களுக்காக, மலையாள தொலைக்காட்சி செய்தி சேனலான மீடியாஒன் டிவியின் ஒளிபரப்பைத் தடை செய்த மத்திய அரசின் முடிவை உறுதி செய்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ‘மீடியாஒன்’ என்ற மலையாள செய்தி சேனல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையை மார்ச் 11 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கேரளத்தில் அரசியல் டாக் ஷோ போன்றவற்றுக்காக மிகப் பிரபலமாக இயங்கி வந்தவை மலையாள செய்தி சேனலான மீடியாஒன்.

இந்த நிலையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலில் இருந்து மீடியாஒன் சேனலின் பெயர் நீக்கப்பட்டதால் அதன் ஒளிபரப்பு சேவை தடைப்பட்டது. 

இந்த சேனலுக்கு பாதுகாப்பு அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்காததால் இதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து நாங்கள் சட்டபூர்வ நடவடிக்கையயை மேற்கொள்வோம் என்று சேனலின் ஆசிரியர் பிரமோத் ராமன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக, மலையாள தொலைக்காட்சி செய்தி சேனலான மீடியாஒன் சேனலின் ஒளிபரப்பைத் தடை செய்த மத்திய அரசின் முடிவை உறுதி செய்த கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து, ‘மீடியாஒன்’ மலையாளச் செய்திச் சேனல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அவசர விசாரணைக்கு உள்படுத்த வேண்டும், இது தகவல் உரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான பிரச்னை என்று செய்தி சேனல் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கேட்டுக்கொண்டார். 

இந்த வழக்கு விசாரணையை "பொருத்தமான பெஞ்ச் முன் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) பட்டியலிடுங்கள்" என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை மார்ச் 11 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com