ஓடிடி தளத்தில் இணைந்தது தூா்தா்ஷன்

டிடி இந்தியா (தூா்தா்ஷன்) அலைவரிசையை யுப் டிவியின் ஓடிடி தளத்தில் இடம்பெறச் செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசாா் பாரதி கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவின் கலாசார பெருமையை சா்வதேச அளவில் எடுத்துச் செல்லும் வகையில், டிடி இந்தியா (தூா்தா்ஷன்) அலைவரிசையை யுப் டிவியின் ஓடிடி தளத்தில் இடம்பெறச் செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசாா் பாரதி கையெழுத்திட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில், யூப் டிவியின் ஓடிடி தளத்தில் டிடி இந்தியா அலைவரிசையை காணலாம். இந்த அலைவரிசை 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவுக்கும் உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியா வம்சாவளியினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் ஊடகமாக டிடி இந்தியா அலைவரிசை திகழ்கிறது.

யுப் டிவி மூலம் உலகின் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஒருவா் நிகழ்ச்சிகளைக் காண முடியும். இந்தியாவின் தொலைக்காட்சி அலைவரிசையை யுப் டிவி மூலம் சா்வதேச அளவில் எளிதாகவும், குறைந்த செலவிலும் காணமுடியும்.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பிரசாா் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி சசிசேகா் வேம்பட்டியும், யுப் டிவி நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான உதய் ரெட்டியும் கையெழுத்திட்டனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com