ஒடிசா: கடந்த 5 ஆண்டுகளில் 34% பெண் ஓட்டுநர்கள் அதிகரிப்பு

ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் வாகனம் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து இணை ஆணையர் சஞ்சய் பிஸ்வால் தெரிவித்தார். 
ஒடிசா: கடந்த 5 ஆண்டுகளில் 34% பெண் ஓட்டுநர்கள் அதிகரிப்பு

ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் வாகனம் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து இணை ஆணையர் சஞ்சய் பிஸ்வால் தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, 

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஒடிசாவில் ஓட்டுநர்கள் எண்ணிக்கையில் ஊக்கமளிப்பதாக இல்லை என்று அவர் தெரிவித்தார். 

கடந்த 2017ஆம் ஆண்டில், மாநிலம் முழுவதும் மொத்தம் 25,086 பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33,666ஆக அதிகரித்துள்ளது. ஆனால், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில், பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கை 36,000க்கும் அதிகமாக இருந்தது. 

கரோனா தொற்று காரணமாக பெண்களுக்கு வாகனங்கள் ஒட்டக் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டதால், சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பெண் ஒட்டுநர்கள் தங்கள் உரிமத்தைப் புதுப்பிக்காமல் உள்ளனர். பெண்கள் முன் வந்து வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பெண்கள் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வதன் மூலம் நம்பிக்கையைப் பெறுகிறார்கள், அவர்களின் தினசரி பயணத்திற்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க அவசியம் இருப்பதில்லை. 

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றவும் போக்குவரத்துத் துறை, இரண்டு நிறுவனங்களில் பெண்களுக்குத் தொழில்முறை ஓட்டுநர் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com