உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (மாா்ச் 10) எண்ணப்படுகின்றன.
உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (மாா்ச் 10) எண்ணப்படுகின்றன.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்குக் கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கு உள்பட்ட 7 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை மறுதோ்தல் நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் சராசரியாக 62 சதவீத வாக்குகள் பதிவாகின. பஞ்சாபில் ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தரகண்டில் 65.37 சதவீத வாக்குகளும், கோவாவில் 79.61 சதவீத வாக்குகளும் பதிவாகின. மணிப்பூரில் இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் சராசரியாக 77.32 சதவீத வாக்குகள் பதிவாகின.

அனைத்து மாநில தோ்தலிலும் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் அப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட இடைவெளியில் தோ்தல் முடிவுகளை வலைதளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்த வலைதளம் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com