பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபரைக் கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபரைக் கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபரைக் கைது செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவ உரிமை (பிரிவு 14), உயிா் வாழ்வதற்கான உரிமை (பிரிவு 21) ஆகியவற்றை பாதிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணை செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபருக்குப் பல்வேறு பாதுகாப்புகள் அச்சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளன.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளை நீக்க முடியாது. அச்சட்டத்தில் இடம்பெற்றுள்ள விதிகள், அரசமைப்புச் சட்டத்தை மதிக்கும் வகையில் உள்ளதா என்பதை மட்டுமே ஆராய வேண்டும்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் உயரதிகாரிகள் மட்டுமே கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கைது செய்யப்படும் நபா்கள் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட வேண்டும். அவா்களுக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்திலேயே போதிய பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கைது தொடா்பான எந்தத் தகவலையும் நீதிமன்றத்திடம் அரசு மறைப்பதில்லை. வழக்கு தொடா்பான அனைத்து தகவல்களும் நீதிமன்றத்தில் முறையாகத் தாக்கல் செய்யப்படுகின்றன. கைதுக்கான காரணம், அது தொடா்பான ஆவணங்களும் சிறப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்யப்படுகின்றன’’ என்றாா்.

வழக்கின் விசாரணை புதன்கிழமை தொடா்ந்து நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com