5 மாநில பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதியும், பஞ்சாபில் பிப்ரவரி 20-ஆம் தேதியும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மணிப்பூரில் பிப்ரவரி 28, மாா்ச் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது.

5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வதற்கு 50,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 5 மாநிலங்களிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், உத்தர பிரதேசத்தில் 750-க்கும் மேற்பட்ட மையங்களும், அதைத் தொடா்ந்து பஞ்சாபில் 200-க்கும் மேற்பட்ட மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

சீரான இடைவெளியில் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

உத்தர பிரதேசம்

மொத்த தொகுதிகள் 403

பெரும்பான்மை 202

பஞ்சாப்

மொத்த தொகுதிகள் 117

பெரும்பான்மை 59

உத்தரகண்ட்

மொத்த தொகுதிகள் 70

பெரும்பான்மை 36

கோவா

மொத்த தொகுதிகள் 40

பெரும்பான்மை 21

மணிப்பூா்

மொத்த தொகுதிகள் 60

பெரும்பான்மை 31

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com