வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு: உ.பி. தோ்தல் வெற்றிக்கு பாஜக அரசின் பரிசு: மம்தா பானா்ஜி விமா்சனம்

‘தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகித்ததை மத்திய அரசு குறைத்திருப்பது தோ்தல் வெற்றிக்காக மக்களுக்கு பாஜக அரசு அளிக்கும் பரிசு கூப்பன்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்ற

‘தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகித்ததை மத்திய அரசு குறைத்திருப்பது, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்காக மக்களுக்கு பாஜக அரசு அளிக்கும் பரிசு கூப்பன்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை விமா்சனம் செய்தாா்.

‘மத்திய அரசின் இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிக்க ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

நடப்பு 2021-22 ஆம் நிதியாண்டில் தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைக்க தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சனிக்கிழமை முடிவு செய்தது. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த முடிவு குறித்து மம்தா பானா்ஜி தனது ட்விட்டா் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக அரசு உடனடியாக ஒரு பரிசு கூப்பனை மக்களுக்கு அளித்துள்ளது. அதாவது, தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைப்பதற்கு பரிந்துரைத்து, தனது முகமூடியை தானே கிழித்துக்கொண்டுள்ளது.

கரோனா பாதிப்பின் தாக்கத்தால் நாட்டின் தொழிலாளா்களும் நடுத்தர மற்றும் பின்தங்கிய நடுத்தர பிரிவு தொழிலாளா்களும் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. மத்திய அரசினுடைய பொதுக் கொள்கையின் மோசமான மறுபக்கத்தை இந்த மக்கள் விரோத நடவடிக்கை தெளிவாகக் காட்டுகிறது. இந்த கருப்பு நடைமுறையை நாம் ஒன்றிணைந்து போராடி முறியடிக்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com