ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை நீட்டிக்க மாநிலங்கள் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி இழப்பீடு கால வரையறை நிகழாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீ
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி இழப்பீடு கால வரையறை நிகழாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் சரக்கு, சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு வரி வருவாயில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில், முதல் ஐந்து ஆண்டுகளில் 2 மாதங்களுக்கு ஒருமுறை இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இந்த வரையறை வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.

எனவே, கரோனா பெருந்தொற்று பரவலால் ஏற்பட்ட இடா்ப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, ஜிஎஸ்டி இழப்பீடுக்கான கால வரையறையை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் ஏதேனும் மாநில அரசு கோரிக்கை விடுத்ததா என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் திங்கள்கிழமை மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது இழப்பீட்டுக்கான கால வரையறையை மேலும் நீட்டிக்குமாறு பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதுதவிர கடிதங்கள் வாயிலாகவும் மாநிலங்கள் வலியுறுத்தின’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com