ரூ.1.07 லட்சம் கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்திடம் அனுமதி கோரியது மத்திய அரசு

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1.07 லட்சம் கோடி நிகர கூடுதல் செலவினத்துக்கு நாடாளுமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி கோரியது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1.07 லட்சம் கோடி நிகர கூடுதல் செலவினத்துக்கு நாடாளுமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி கோரியது.

தொகுப்பு நிதியில் இருந்து துணைநிலை மானியம் கோரும் 3-ஆவது தொகுதி மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்த கூடுதல் செலவினத்துக்காக ரூ.1.58 லட்சம் கோடி கோரப்பட்டுள்ளது.

மொத்த செலவினத்தில் ரூ.1.07 லட்சம் கோடி மட்டுமே தொகுப்பு நிதியில் இருந்து பெறப்படவுள்ளதாகவும் மீதமுள்ள ரூ.50,946 கோடியானது மத்திய அமைச்சகங்கள், துறைகளின் சேமிப்பு வாயிலாகப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செலவினத்தில் சுமாா் ரூ.14,902 கோடியானது உர மானியத்துக்காகவும் ரூ.13,049 கோடியானது நிதி முதலீட்டு வளா்ச்சிக்கான தேசிய வங்கிக்கும் வழங்கப்படவுள்ளது. பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி வழங்கப்படவுள்ளது. பிராந்திய ஊரக வங்கிகளுக்கு மூலதனத் தொகை அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

துணைநிலை மானிய கோரிக்கை மசோதா மீது விரைவில் விவாதம் நடைபெறும் எனவும் அவற்றுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளிப்பாா் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது முதல் தொகுதி துணைநிலை மானிய கோரிக்கை மசோதா மூலமாக ரூ.23,675 கோடியையும் கடந்த குளிா்காலக் கூட்டத்தொடரில் 2-ஆவது தொகுதி மசோதாவின் மூலமாக ரூ.3.73 லட்சம் கோடியையும் மத்திய அரசு பெற்றது. நடப்பு நிதியாண்டில் அரசின் மொத்த செலவினம் ரூ.37.70 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com