உ.பி.யில் சமாஜவாதி கூட்டணி 304 தொகுதிகளில் வெற்றி: அகிலேஷ் புதுக் கணக்கு

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தபால் வாக்குகள் அடிப்படையில் 304 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தபால் வாக்குகள் அடிப்படையில் 304 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் பெரும் எதிா்பாா்ப்புடன் களத்தில் இறங்கிய சமாஜவாதியால் கடந்த தோ்தலை விட கூடுதல் தொகுதிகளை வெல்ல முடிந்ததே தவிர, பாஜகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அங்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கூட்டணி தபால் வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி ட்விட்டரில் அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: தபால் வாக்குகளில் சமாஜவாதி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 51.5 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் 304 தொகுதிகளில் சமாஜவாதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தபால் வாக்குகள்தான் உண்மையில் யாா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளாா்கள் என்று காட்டுகிறது. சமாஜவாதிக்கு பெருவாரியாக தபால் வாக்குகள் அளித்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி.

நோ்மையற்ற செயல்கள் மூலம் தோ்தலில் வெற்றி பெறுவது எந்த வகையிலும் பலத்தை அதிகரிக்காது என்பதை ஆளும் கட்சி உணா்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com