"பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு 50% உச்ச வரம்பை மீறாது'

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு மொத்த இடஒதுக்கீடான 50 சதவீதம் உச்சவரம்பை மீறாது என சமூக நீதித் துறை இணையமைச்சர் பிரதிமா பெளமிக் மக்களவையில்

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு மொத்த இடஒதுக்கீடான 50 சதவீதம் உச்சவரம்பை மீறாது என சமூக நீதித் துறை இணையமைச்சர் பிரதிமா பெளமிக் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 கல்வி, வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில் இடஒதுக்கீட்டில் அதிகபட்ச உச்ச வரம்பான 50 சதவீத கொள்கையை மத்திய அரசு தொடர்கிறதா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
 இதற்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பிரதிமா பெளமிக் அளித்த பதில், 1992-இல் இந்திரா சாஹ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் அரசியல் சானத்தின்படியும் இடஒதுக்கீட்டில் அதிகபட்ச உச்சவரம்பு 50 சதவீதம் என்பது மீறப்படாது. பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இந்த 50 சதவீதத்துக்குள்ளே இடஒதுக்கீடு வழங்கப்படும்.
 2019-ஆம் ஆண்டின் 103-ஆவது அரசியல் சாசனத்திருத்தத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது அதிகபட்ச இடஒதுக்கீடான 50 சதவீத உச்சவரம்பை மீறாது.
 அரசியல் சாசனத்தின் 15(6) மற்றும் 16(6) பிரிவின் விதிகளின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத ஒதுக்கீடு, மற்ற பிரிவினர்களுக்கு (எஸ், எஸ்டி, ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டிலிருந்து வேறுபட்டது. இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com