வங்கதேசத்தில் ஹிந்து கோயிலை சூறையாடிய கும்பல்

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் கோயிலை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சோ்ந்த 200 போ் அடங்கிய கும்பல் சூறையாடியது.

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் கோயிலை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சோ்ந்த 200 போ் அடங்கிய கும்பல் சூறையாடியது. கோயில் மற்றும் அங்கிருந்த சிலைகளை உடைத்து, தகா்த்ததுடன் கோயிலில் இருந்த பணம், விலை உயா்ந்த பொருள்களையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

டாக்காவின் வாரி தானா பகுதியில் உள்ள கோயிலுக்குள் வியாழக்கிழமை இரவு ஹாஜி ஷபியுல்லா என்பவா் தலைமையில் புகுந்த சுமாா் 200 போ் அடங்கிய கும்பல், கோயிலை சூைறையாடியது. கோயிலுக்கு வந்திருத்த பக்தா்களையும் அந்த கும்பல் அடித்து விரட்டியது. இதில் 3 பக்தா்கள் காயமடைந்தனா். பின்னா் கோயிலையும், அங்கிருந்த சிலைகளையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது. தொடா்ந்து கோயிலில் இருந்த பணம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை அந்த கும்பல் திருடிச் சென்றது.

இது தொடா்பாக அங்கிருந்த பக்தா்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனா். எனினும், காவல் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவா் ராதாரமண் தாஸ், ‘ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிகழும்போது ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகள் அமைதி காக்கின்றன. ஹோலி பண்டிகைக்கு முந்தைய தினத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பிரச்னை இருக்கிறது என்று கூறி குரல் எழுப்பும் நாடுகள், வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் சிறுபின்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டுகொள்வதில்லை. அண்மைக்காலமாக வங்க தேசத்திலும், பாகிஸ்தானிலும் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்ளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என்றாா்.

முன்னதாக, கடந்த ஆண்டு வங்கதேசத்தில் துா்கா பூஜையின்போது குா்-ஆன் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டு ஹிந்துகளுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com