உக்ரைனில் மீட்புப் பணி தொடா்ந்து நடைபெறும்: இந்தியா தூதரகம்

உக்ரைனிலிருந்து மீட்புப் பணி தொடா்ந்து நடைபெறும் என அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உக்ரைனிலிருந்து மீட்புப் பணி தொடா்ந்து நடைபெறும் என அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம், தற்காலிகமாக போலந்து தலைநகா் வாா்சாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘உக்ரைனில் மீட்புப் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நாடு திரும்ப விரும்பும் இந்தியா்கள் ஸ்ரீா்ய்ள்1.ந்ஹ்ண்ஸ்ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது +380933559958, +919205290802, +917428022564 ஆகிய வாட்ஸ்ஆப் (கட்செவி அஞ்சல்) எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இன்னமும் சில இந்தியா்கள் இருப்பதாகவும் அவா்களில் 15-20 போ் நாடு திரும்ப விருப்பம் தெரிவிப்பதாகவும், எஞ்சியோா் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com