கர்நாடகம்: நீதிபதிகளை மிரட்டியதாக தமிழக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த தமிழக  தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது கர்நாடகக் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.
கர்நாடகம்: நீதிபதிகளை மிரட்டியதாக தமிழக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக  தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது கர்நாடகக் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

மதுரை தல்லாகுளம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கோரிப்பாளையம் பகுதியில் ஹிஜாப் தொடா்பான தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சாா்பில் கடந்த 17ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினா் கோயம்புத்தூரைச் சோ்ந்த ரஹமத்துல்லா கலந்து கொண்டு தீா்ப்பு குறித்து அவதூறாகவும், மக்களிடையே விரோதத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும்,  ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு எதிராக ரஹ்மத்துல்லா விடியோ வெளியிட்டார். அதில் ‘ஜார்கண்டில் தவறான தீர்ப்பை வழங்கிய நீதிபதி காலை நடைப்பயிற்சியின்போது கொல்லப்பட்டார்’ எனக் குறிப்பிட்டார்.

பின் அந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அளித்த புகாரின் அடிப்படையில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிா்வாகி ரஹ்மத்துல்லாவை மதுரை தனிப்படை காவலர்கள் கடந்த சனிக்கிழமை திருநெல்வேலியில்  கைது செய்தனா். 

மேலும், தஞ்சாவூரில்  பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களைத் தரக்குறைவாக கண்டித்த  தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி ஜமால் முகமது உஸ்மானியும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவர் மீது கர்நாடகக் காவல்துறையினர்  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com