டெல்டாக்ரான் வைரஸ் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல்டாக்ரான்: பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சீனாவில் கரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், அமெரிக்காவில் டெல்டாக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டெல்டாக்ரான்  டெல்டா மற்றும் ஓமிக்ரான் என இரண்டு உருமாறிய கரோனா வைரஸின் பண்புகளை கொண்டுள்ளதாகவும், இது ஒரு கலப்பின மாறுபாடு கொண்டுள்ளது என்றும் பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

உயிர்வேதியியல் பேராசிரியர் ஓ'நீல் லூக், விஞ்ஞானி கூறியது:

"டெல்டாக்ரான் வைரஸ் மாதிரி வடக்கு பிரான்சில் உள்ள ஒரு முதியவரிடமிருந்து கண்டறியப்பட்டது. இது மற்ற வைரஸை விட சற்று மாறுப்பட்டு இருந்தது. அதன் பெரும்பாலான மரபணு வரிசை டெல்டாவைப் போலவே இருந்தது, இந்த டெல்டா வைரஸ் கடந்த ஆண்டின் பிற்பகுதி வரை உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது

அமெரிக்காவில் மார்ச் மாதத்தில் மேலும் மூன்று கலப்பின மரபணு வைரஸ்கள் கண்டறியபட்டுள்ளன. பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், யு.எஸ் மற்றும் யு.கே ஆகிய நாடுகளில் இப்போது 60-க்கும் மேற்பட்ட டெல்டாக்ரான் வைரஸ்கள் உள்ளன.

டெல்டாக்ரான், ஓமிக்ரானை இடமாற்றம் செய்யுமா, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் சிறப்பாக இருக்குமா மற்றும் அது கடுமையான நோயை உண்டாக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

டெல்டாக்ரான் வைரஸ் குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியர் லியோண்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ் கூறுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் பாதிப்புகள் உள்ளது. இந்த இரண்டு தொற்றும் இணைந்திருப்பதால் இதற்கு டெல்டாக்ரான் என பெயர் வைத்துள்ளோம்.

இந்த புதிய தொற்றால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வேகமாக பரவக்கூடியதா என்பது குறித்து தீவிரமாகப் பகுப்பாய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானி ஒருவர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பதிவாகும் டெல்டாக்ரான் வைரஸ்கள் மற்ற நாடுகளில் காணப்படும் டெல்டாக்ரான் வைரஸ்களோடு ஒப்பிடும்போது வேறுபாடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

அருகிலுள்ள பல நாடுகளில் டெல்டாக்ரான் காணப்படுவதால் இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், ஓமிக்ரான் ஐரோப்பாவில் தொடர்ந்து பரவலாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் தொற்றே இன்னும் முடிவடையாத நிலையில் புதிதாக டெல்டாக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com