அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை

தில்லியில் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி-உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார். 
சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி-உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி-உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

தில்லியில் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி-உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டு உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு எல்லை விவகாரம் குறித்து பேச சீனா தாமாக முன்வந்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சா் வாங் யி இந்தியா வந்துள்ளார். இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசிய வாங் யி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து இந்தியா சாா்பில் வலியுறுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே உக்ரைன் போர் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது. 

முன்னதாக, பாகிஸ்தான் சென்ற வாங் யி, அங்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றாா். அந்தக் கூட்டத்தில் காஷ்மீா் விவகாரம் தொடா்பாக வாங் யி கருத்து தெரிவித்ததற்கு இந்தியா சாா்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலுக்கு வியாழக்கிழமை திடீா் பயணம் மேற்கொண் வாங் யி, தலிபான் தலைவா்களை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா், அங்கிருந்து வியாழக்கிழமை மாலை தில்லி வந்து சோ்ந்தாா்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சீனா மட்டும் ரஷியாவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பயணம் மேற்கொண்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com