ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக மாறப் போகும் சாலைகள்.. 

தில்லியில் இருக்கும் சாலைகளை ஐரோப்பிய நாடுகளின் சாலைகளின் தரத்துக்கு உயர்த்தும் பணிகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக மாறப் போகும் சாலைகள்.. 
ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக மாறப் போகும் சாலைகள்.. 


புது தில்லி: தில்லியில் இருக்கும் சாலைகளை ஐரோப்பிய நாடுகளின் சாலைகளின் தரத்துக்கு உயர்த்தும் பணிகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

தில்லியில் உள்ள 540 கி.மீ. தொலைவு சாலைகளை, ஐரோப்பிய நாடுகளில் உள்ள சாலைகளின் தரத்துக்கு உயர்த்தும் பணியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஈடுபட்டுள்ளார். இந்த உயர்நிலைக் கூட்டத்தில், சாலை அமைக்கும் பணி எந்த அளவில் இருக்கிறது மற்றும் அதன் ஆய்வறிக்கை உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டது.

இந்த சாலை அமைக்கும் திட்டமானது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மிக விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் அது 2022, ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைக்கும் திட்டத்தில், 7 முக்கியச் சாலைகள் சுமார் 32.5 கி.மீ. தொலைவுக்கு, இருபுறங்களிலும் மிக அழகாக, ஐரோப்பிய சாலைகளைப் போலவே அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com