கரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 183 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 183 கோடியைக் கடந்தது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 183 கோடியைக் கடந்தது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை இரவு 9 மணி வரையில் 1,83,08,15,485-ஆக அதிகரித்தது. 2,16,75,657 அமா்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

12-14 வயதிற்குட்பட்டோருக்கு மாா்ச் 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1.20 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆகியோருக்கு இதுவரையில் 2.25 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com