அடக்குமுறை பாஜக ஆட்சியை எதிர்த்துப் போராட அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்க்க வேண்டும்: மம்தா அழைப்பு

அடக்குமுறை "பாஜக ஆட்சியை" எதிர்த்துப் போராட அனைத்து "முற்போக்கு சக்திகளும்" கைகோர்க்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பாஜக அல்லாத முதல்வர்களுக்கும், எதிர்க்கட
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

கொல்கத்தா:  அடக்குமுறை "பாஜக ஆட்சியை" எதிர்த்துப் போராட அனைத்து "முற்போக்கு சக்திகளும்" கைகோர்க்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பாஜக அல்லாத முதல்வர்களுக்கும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், அடக்குமுறை பாஜக ஆட்சியை எதிர்த்துப் போராட  அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்க்க வேண்டும்.  பாஜகவை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க எதிர்க்‍கட்சி தலைவர்களின் வசதிக்கேற்ப இடத்தையும், நேரத்தையும் முடிவு செய்து, விரைவில் நேரில் சந்திக்‍க அழைப்பு விடுத்துள்ள மம்தா, "நாட்டில் தகுதியான அரசாங்கத்திற்கு" வழிவகுக்க, ஒரு ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்க்கட்சியை உருவாக்க உறுதி ஏற்போம் என்றும் மம்தா கூறியுள்ளார். 

மார்ச் 27 தேதியிட்ட அந்த கடிதத்தில், "இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது ஆளும் பாஜகவின் நேரடித் தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிப்பதாகவும், அந்த கவலையைத் தெரிவிக்கவே நான் உங்களுக்கு கடிதம் எழுதுயிருக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com