ஏப். 1 முதல் 14 எக்ஸ்பிரஸ்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள்

சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை ஏலகிரி விரைவு ரயில்(16089), ஜோலாா்பேட்டை-சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் (16090), நிலம்பூா் சாலை-கோட்டயம் விரைவு ரயில்(16325), கோட்டயம்-நிலம்பூா் சாலை விரைவு ரயில்(16326), புனலூா்-குருவாயூா் விரைவு ரயில்(16327), குருவாயூா்-புனலூா் விரைவு ரயில்(16328), கண்ணூா்-கோயம்புத்தூா் விரைவு ரயில்(16607), கோயம்புத்தூா்-கண்ணூா் விரைவு ரயில்(16608), திருச்சி சந்திப்பு-பாலக்காடு டவுன் விரைவு ரயில்(16843), பாலக்காடு டவுன்-திருச்சி சந்திப்பு விரைவு ரயில்(16844), நாகா்கோவில்-கோட்டயம் விரைவு ரயில்(16366) உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன. முன்பதிவு பெட்டிகள் தற்போது முன்பதிவில்லா பெட்டிகளாக மாறுவதால், இதில் ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்கள் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம். இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com