வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு: மத்திய இணையமைச்சா் அனுப்ரியா படேல்

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்து,
மக்களவையில் பேசிய வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல்.
மக்களவையில் பேசிய வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல்.

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்து, 4,087 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.10 லட்சம் கோடி) எட்டியுள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல் கூறினாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி நிகழாண்டு ஜனவரி வரையிலான 10 மாதங்களில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 4,087 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 3,266 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.47 லட்சம் கோடி) இருந்தது.

நடப்பு நிதியாண்டில் கோதுமை, சா்க்கரை, பருத்தி ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அரிசி உள்ளிட்ட சில தானியங்கள், காபி, இறைச்சி, பால் பொருள்கள், கோழி இறைச்சி, முட்டை, கடல் உணவு வகைகள் ஆகிய முக்கியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அவை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பால், விவசாயிகளின் வருவாயும் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com