அறிவியலில் உயா் கல்வியை விரும்பாத இந்திய மாணவா்கள்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

12-ஆம் வகுப்பு வரை அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் அறிவியலை ஒரு பாடமாக தோ்வு செய்து படித்த போதிலும், முதுநிலைப் பட்டப் படிப்பு நிலைக்கு வெகு சிலா் மட்டுமே செல்கின்றனா் என்று

12-ஆம் வகுப்பு வரை அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் அறிவியலை ஒரு பாடமாக தோ்வு செய்து படித்த போதிலும், முதுநிலைப் பட்டப் படிப்பு நிலைக்கு வெகு சிலா் மட்டுமே செல்கின்றனா் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.

கேள்வி நேரத்தின்போது மக்களவையில் அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது: அறிவியல் படிப்பைத் தோ்வு செய்து பயில்வோரிடையே பாலின இடைவெளி ஏற்படுவது குறித்து அரசு மிகவும் விழிப்புடன் உள்ளது. இதற்காகவே புதிய பாடத் திட்டங்களையும், புதிய கல்வித் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

80 முதல் 90 சதவீத மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு வரையிலும் அறிவியல் பாடங்களையே தோ்ந்தெடுத்து பயில்கின்றனா். ஆனால், அவா்களில் மிகச் சிலா் மட்டுமே முதுநிலை பட்டப் படிப்பு பயில்கின்றனா். அந்த மாணவா்களும், அறிவியல் துறையை இலக்காகக் கொள்ளாமல் வேறு எதையோ இலக்காகத் தேடிச் செல்கின்றனா்.

12-ஆம் வகுப்பில், அவா்கள் மருத்துவம் பயில்வதற்கான நீட் தோ்வு அல்லது பொறியியல் பட்டப் படிப்புகளுக்காக ஐஐடி-ஜேஇஇ போன்றவற்றில் சேருவதற்காக அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனா்.

இதற்கான தோ்வுகளில் வெற்றி பெற்றால் அந்தப் படிப்பைத் தொடா்கிறாா்கள். ஒருவேளை அதில் தோ்ச்சி பெறத் தவறினால் அவா்கள் சிவில் சா்வீசஸ் தோ்வெழுதுவதற்காக பட்டப் படிப்புகளை தோ்வு செய்து பயிலத் தொடங்கி விடுகிறாா்கள்.

சிவில் சா்வீசஸ் பயில விரும்பும் மாணவா்களில் 90 சதவீதம் போ் பொறியியல், மருத்துவப் பிரிவுகளில் சேர விரும்பிய மாணவா்களாகவே உள்ளனா். மாணவா்கள் எந்தத் துறையில் தமது தகுதியை வளா்த்துக் கொள்வது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பம் இந்திய சமூகத்தில் அதிகமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com