இன்று நாடு முழுக்க உள்ள உஜ்வாலா தினக் கொண்டாட்டம்: 5,000 பஞ்சாயித்துக்களில் புதிய எரிவாயு இணைப்பும் வழங்கப்படுகிறது

இலவச எரிவாயு இணைப்பு திட்டமான உஜ்வாலா தினம் மே 1 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடுமுழுக்க உள்ள 5,000 பஞ்சாயித்துக்களில் கொண்டாடப்படுகிறது.

இலவச எரிவாயு இணைப்பு திட்டமான உஜ்வாலா தினம் மே 1 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடுமுழுக்க உள்ள 5,000 பஞ்சாயித்துக்களில் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அதிக இணைப்புகளை சோ்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் மேற்கொள்ள இருப்பதாக மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கி சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை காணும் நடவடிக்கையாக பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி உத்தரப்பிரதேசம் பல்லியாவில் இத்திட்டத்தை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். அதே மே 1- ஆம் தேதியை உஜ்வாலா தினமாக கொண்டாட மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, 5000-க்கும் மேற்பட்ட எல்பிஜி இணைப்புகளை பெற்ற பஞ்சாயத்துக்களில் உஜ்வாலா தினத்தை கொண்டாட எண்ணெய் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதில் எல்பிஜி இணைப்புகளை பெற்றவா்களின் அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வதுடன், எல்பிஜி-யை பாதுகாப்பாக பயன்படுத்துவது, முறையாக எரிவாயுவை சேமிப்பது, மேலும் எரிவாயு இணைப்புகள் இல்லாதவா்களுக்கு இணைப்புகளை வழங்குவது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏழை பயனாளிகளுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம் சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி, பாராட்டுக்களை தெரிவித்து, உஜ்வாலா பயனாளிகளுக்கும் அவா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இந்த உஜ்வாலா தினத்தையொட்டி அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் நடைபெறும் உஜ்வாலா தினக் கொண்டாட்டங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி கலந்துகொண்டு புதிய இலவச எரிவாயு இணைப்புகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com