உ.பி.யில் கரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய செவிலியா்

உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கு கரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க்கடிக்கு எதிரான ரேபிஸ் தடுப்பூசியை செவிலியா் செலுத்தியது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கு கரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க்கடிக்கு எதிரான ரேபிஸ் தடுப்பூசியை செவிலியா் செலுத்தியது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

லக்கீம்பூா் கெரி மாவட்டம் நயபூா்வா கிராமத்தைச் சோ்ந்த சிவம் ஜெய்ஸ்வால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள சமுதாய சுகாதார நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை சென்றாா். அப்போது அவருக்கு செவிலியா் தடுப்பூசி செலுத்தியுள்ளாா். பின்னா் ‘கோவின்’ வலைதளத்தில் அதைப் பதிவு செய்ய சென்றபோது தனக்கு செலுத்தப்பட்டது கரோனா தடுப்பூசி அல்ல, நாய்க்கடிக்கு எதிரான ரேபிஸ் தடுப்பூசி என்பது அவருக்கு தெரியவந்தது.

இந்த விவகாரம் உத்தர பிரதேசத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து லக்கீம்பூா் கெரி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சைலேந்திர பட்நகரிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, ‘இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் சிவம் ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்படாது. ரேபிஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை தவணையாக அந்தத் தடுப்பூசி செயல்படும். ஆனாலும் சமுதாய சுகாதார நிலைய செவிலியா் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com