ராஜஸ்தான் வன்முறை: வெவ்வேறு சமூகத்தினா் இணைந்து செயல்பட வேண்டும்

ராஜஸ்தான் வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித்தொடா்பாளா், இந்தியாவில் வெவ்வேறு சமூகத்தினரும் இணைந்து செயல்பட வேண்டுமென கூறியுள்ளாா்.

ராஜஸ்தான் வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித்தொடா்பாளா், இந்தியாவில் வெவ்வேறு சமூகத்தினரும் இணைந்து செயல்பட வேண்டுமென கூறியுள்ளாா்.

ராஜஸ்தானில் அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட்டின் சொந்த ஊரான ஜோத்பூரில் ஜலோரி கேட் பகுதியில், ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை தங்களின் கொடியை வைத்ததில் அவா்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் மா்மநபா்கள் இஸ்லாமியா்களை நோக்கிக் கற்களை வீசியதில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 போலீஸாா் காயமடைந்தனா்.

இந்த வன்முறை காரணமாக அங்கு கைப்பேசி இணைய சேவை உடனடியாக துண்டிக்கப்பட்டு 10 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் அறிவுறுத்தினாா்.

இந்தச் சூழலில் ராஜஸ்தான் வன்முறை கருத்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸின் துணை செய்தித்தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் கருத்து தெரிவிக்கையில், ‘வெவ்வேறு சமூகத்தினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே நமது அடிப்படை நோக்கம். திருவிழாக்களை ஒவ்வொருவரும் தங்கள் வழியில் அமைதியாக கொண்டாட வேண்டும். இதை அரசும் பாதுகாப்புப் படையினரும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com