உலக சுகாதார அமைப்பின் உயிரிழப்பு கணக்கீடு: சுகாதாரத் துறை அமைச்சர்கள் எதிர்ப்பு

​இந்தியாவின் கரோனா உயிரிழப்புகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளத
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவின் கரோனா உயிரிழப்புகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு கவுன்சிலின் 14-வது மாநாடு குஜராத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். இதில் பல்வேறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

இந்த மாநாட்டில் இந்தியாவின் கரோனா உயிரிழப்புகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைத்து சுகாதாரத் துறை அமைச்சர்களும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினர். 

தீர்மானத்தில், "உலக சுகாதார அமைப்பின் கணக்கீடு முறை இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. உலக சுகாதார அமைப்பு பின்பற்றும் நடைமுறையினால் கிடைக்கப்பெற்றுள்ள இந்த எண்ணிக்கை தவறானது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சக் கே. சுதாகர் குற்றம்சாட்டினார். மேலும், ஏமாற்றமளிக்கும் வகையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பிடம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் இதை சர்வதேச மன்றங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், உலக சுகாதார அமைப்பின் கணக்கீடு தவறானது. 47.4 லட்சம் கரோனா உயிரிழப்புகள் என்ற எண்ணிக்கையை அடைவதற்கு சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை" என்றார். மேலும், இந்தியாவிடம் வலிமையான தரவுகள் சேகரிப்பு அமைப்பு இருப்பதாகவும், அதன் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டாம் என்றும் பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com