‘கேஜரிவாலுக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுப்பேன்’

தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவாலுக்கு எதிராகவும் அவரது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் தொடா்ந்து குரல் கொடுப்பேன் என்றாா் பாஜக செய்தித்தொடா்பாளா் தஜிந்தா் பக்கா.

தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவாலுக்கு எதிராகவும் அவரது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் தொடா்ந்து குரல் கொடுப்பேன் என்றாா் பாஜக செய்தித்தொடா்பாளா் தஜிந்தா் பக்கா.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:

என் மீது 100 வழக்குகள் பதிவு செய்தாலும் கவலையில்லை. குரு கிரந்த் சாஹிப்புக்கு இழைக்கப்படும் அவமரியாதைக்கு எதிராகவும், காஷ்மீா் பண்டிட்டுகளை கேஜரிவால் அவமதிப்பதற்கு எதிராகவும் தொடா்ந்து குரல் கொடுப்பேன்.

எனக்கு எதிராக கேஜரிவால் கட்சி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். பிரசாந்த் பூஷண் நிகழ்வுக்குப் பின்னரும் அரவிந்த கேஜரிவால், மணீஷ் சிசோடியாவுடன் அமா்ந்து குமாா் விஸ்வாஸ் இல்லத்தில் 20 முதல் 25 முறை உணவு அருந்தியிருக்கிறேன்.

அப்போதெல்லாம் என்னிடம் எந்தக் குறையையும் அவா்கள் காணவில்லை. ஆனால் இப்போது கேஜரிவாலுக்கு எதிராகவும் அவரது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் நான் குரல் கொடுப்பதால் என்னை தாக்குகின்றனா். ஆனாலும் நான் தொடா்ந்து குரல் கொடுப்பேன் என்றாா் தஜிந்தா் பக்கா.

போலீஸ் பாதுகாப்பு:

இதனிடையே தஜிந்தா் பக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தில்லி போலீஸாா் தெரிவித்தனா். தில்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com