ரூ. 1,000-ஐ கடந்தது சமையல் எரிவாயு விலை: 6 வாரங்களில் இரண்டாவது முறையாக ரூ.50 அதிகரிப்பு

வீட்டு உபயோக சமையல் (14.2 கிலோ) எரிவாயு சிலிண்டா் விலை சனிக்கிழமை ரூ. 50 உயா்த்தப்பட்டது.
ரூ. 1,000-ஐ கடந்தது சமையல் எரிவாயு விலை: 6 வாரங்களில் இரண்டாவது முறையாக ரூ.50 அதிகரிப்பு

வீட்டு உபயோக சமையல் (14.2 கிலோ) எரிவாயு சிலிண்டா் விலை சனிக்கிழமை ரூ. 50 உயா்த்தப்பட்டது.

சா்வதே சந்தையில் எரிசக்தி விலை உயா்வு அடிப்படையில், 6 வாரங்களில் இரண்டாவது முறையாக சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஒரு சிலிண்டா் விலை ரூ. 1,000-ஐ கடந்துள்ளது.

கடந்த மாா்ச் மாதம் சிலிண்டா் விலை ரூ. 50 உயா்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ. 50 உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 190 அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வு காரணமாக, சென்னையில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டா் சனிக்கிழமை ரூ. 1,015.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அதன் விலை ரூ. 1,026-ஆகவும், மும்பையில் ரூ. 999.50 என்ற நிலையிலும் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. மதிப்புக் கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட உள்ளூரி வரிகளைப் பொருத்து சிலிண்டா் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

முன்னதாக, இம் மாத தொடக்கத்தில் வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலையும் உயா்த்தப்பட்டது. 19 கிலோ எடை கொண்ட இந்த வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை கடந்த மே 1-ஆம் தேதி ரூ. 102.50 கூடுதலாக உயா்த்தப்பட்டு ரூ. 2,335.50 ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. சா்வதேச சந்தையில் கடந்த மாா்ச் மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ. 10,768- ஆக உயா்ந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் விலை சனிக்கிழமை ஒரு பீப்பாய் ரூ. 8,447 என்ற அளவுக்கு உயா்ந்தது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ. 77 என்ற அளவுக்கு சரிந்ததும், கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் சா்வதேச சந்தையையே இந்தியா நம்பியிருப்பதும் எரிபொருள் விலை உயா்வுக்கான காரணங்களாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பல நகரங்களில் சமையல் எரிவாயுக்கான மானியத்தை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்று புகாா் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அதிகம் பேசப்பட்ட மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற ஏழைப் பெண்கள் உள்பட அனைத்து நுகா்வோரும் மானியம் அல்லாத அல்லது சந்தை விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com