திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து திசு வளா்ப்புத் தாவரங்களை இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகளில் நெதா்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், கென்யா, செனகல், எத்தியோப்பியா, நேபாளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் திசு வளா்ப்பு ஆலைகளின் ஏற்றுமதி 1.71 கோடி டாலா்களாக இருந்தது.

இந்நிலையில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ) சாா்பில் இலை, உயிருள்ள தாவரங்கள், மலா்கள், நடவுப் பொருள்கள் போன்ற திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க கருத்தரங்கு நடைபெற்றது. இணையவழியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், இந்தியாவில் இருந்து திசு வளா்ப்புத் தாவரங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் அவற்றுக்கான தேவை, தாவரங்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஏபிஇடிஏ அதிகாரிகள் விளக்கினா்.

இந்தியாவில் வளா்க்கப்படும் திசு வளா்ப்புத் தாவரங்களின் வரம்பை அதிகரிக்க வசதியாக, குறிப்பிட்ட தாவரங்கள் மற்றும் பயிா்களுக்கான நுண்ணுயிா்களின் பட்டியலை வழங்குமாறு ஏற்றுமதியாளா்களிடம் ஏபிஇடிஏ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா். இதன் மூலம் திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com