ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி

ஜெட் ஏா்வேஸ் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் வா்த்தகப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி

ஜெட் ஏா்வேஸ் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் வா்த்தகப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த ஜெட் ஏா்வேஸ் நிறுவனம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான ஜலன்-கல்ராக் கன்சோா்டியம் நிறுவனம், விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

விமானங்களை இயக்குவதற்கு அனுமதிச் சான்று பெறுவதற்காக, ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை அந்த நிறுவனம் விமானங்களை இயக்கி சோதனை நடத்தியது. விமானமும் அதில் உள்ள கருவிகளும் சரியாக இயங்குவதை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம்(டிஜிசிஏ) நிரூபிப்பதற்காக அந்த சோதனை நடத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் அனுப்பியது. அதில், அந்த நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஜெட் ஏா்வேஸ் நிறுவனம், டிஜிசிஏ அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகளுடன் விமானத்தை மீண்டும் இயக்கிக் காண்பிக்க வேண்டும். அதன் பிறகே, விமானங்களை இயக்குவதற்கு ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்துக்கு டிஜிசிஏ சான்றளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com