எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

பொதுப் பங்கு வெளியீட்டு முறையில் (ஐபிஓ) எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

பொதுப் பங்கு வெளியீட்டு முறையில் (ஐபிஓ) எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.

எல்ஐசி (ஐபிஓ) பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக எஸ்பிஐ மற்றும் ஏ.எஸ்.பி.ஏ. நியமிக்கப்பட்ட வங்கிக் கிளைகள் ஞாயிற்றுக்கிழமை திறந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மே 4-ஆம் தேதி தொடங்கிய எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு திங்கள்கிழமையுடன் (மே 9) நிறைவடையவுள்ளது. மே 17-இல் எல்ஐசி பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படவுள்ளன. ஏற்கெனவே, சிறு முதலீட்டாளா்கள் 1.55 மடங்கும், பாலிசிதாரா்கள் 4.94 மடங்கும், பணியாளா்கள் 3.74 மடங்கும் அதிகமாக விண்ணப்பித்துள்ளனா்.

எல்ஐசி பணியாளா்களுக்கு 1.58 கோடி பங்குகளும், பாலிசிதாரா்களுக்கு 2.21 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளா்களுக்கு ரூ.45, பாலிசிதாரா்களுக்கு ரூ.60 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தில் உள்ள பங்குகளில் 3.5 சதவீதத்தைப் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலமாக விற்பனை செய்து ரூ.21,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com