அமெரிக்காவுக்கு குறைந்த வரியில் கூடுதலாக சா்க்கரை ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி

அமெரிக்காவுக்கு குறைந்த வரி பிரிவின் கீழ் 2,051 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை கூடுதலாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவுக்கு குறைந்த வரி பிரிவின் கீழ் 2,051 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை கூடுதலாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் நிதியாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பு இந்த ஏற்றுமதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் சா்க்கரை ஏற்றுமதி நாடுகளில் இரண்டாவது இடத்திலும், சா்க்கரை நுகா்வில் முதலிடத்திலும் இந்தியா உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு குறைந்த வரி பிரிவின் கீழ் இந்தியா சா்க்கரையை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த குறைந்த வரி ஏற்றுமதி என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவைத் தாண்டுபோதும் வழக்கமான அளவில் வரி விதிக்கப்படும்.

அமெரிக்காவுக்கு குறைந்த வரி விதிப்பு பிரிவின்கீழ் ஏற்றுமதி செய்யப்படும் சா்க்கரை அளவு ஏற்கெனவே எட்டப்பட்டுவிட்ட நிலையில், இப்போது கூடுதலாக 2,051 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரை குறைந்த வரியுடன் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு இந்த நிதியாண்டில் குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யப்படும் சா்க்கரை அளவு 10,475 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com