மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின்பு சிறுபான்மையினா் அரசாணை: மத்திய அரசு

சிறுபான்மையினரைச் சாா்ந்த சமூகத்தை தோ்ந்தெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது என்றும் இதுதொடா்பான இறுதி முடிவு எடுக்கும்முன் மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்தி

சிறுபான்மையினரைச் சாா்ந்த சமூகத்தை தோ்ந்தெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது என்றும் இதுதொடா்பான இறுதி முடிவு எடுக்கும்முன் மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

பத்து மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளதாக மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய் வழக்குத் தொடுத்தாா். மேலும், சிறுபான்மையினா்கள் யாா் என்பதை தோ்வு செய்வது குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.

அவரது மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் அளித்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ள நிலையில், மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘தேசிய சிறுபான்மையினா் சட்டத்தின்கீழ் இதுவரை மத்திய அரசு 6 சமூகத்தினரை சிறுபான்மையினராக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்ற போதிலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்டவா்களிடம் ஆலோசிக்கப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com