நிலக்கரி சுரங்க விரிவாக்க திட்டத்துக்கான நடைமுறைகளில் தளா்வு கடும்: பற்றாக்குறை எதிரொலி

நாடு கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்து வரும் சூழலில், எந்தவித தாமதமுமின்றி நிலக்கரி உற்பத்தியைப் பெருக்கும் வகையில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்துக்கான நடைமுறைகளில்

நாடு கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்து வரும் சூழலில், எந்தவித தாமதமுமின்றி நிலக்கரி உற்பத்தியைப் பெருக்கும் வகையில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்துக்கான நடைமுறைகளில் தளா்வு அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தீா்மானித்துள்ளது.

இந்த தளா்வு 6 மாத காலத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வரும் சூழலில், மின் தேவை பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நாட்டில் நிலவி வரும் கடுமையான நிலக்கரித் தட்டுப்பாடு, பல மாநிலங்களில் மின் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் ஏற்படும் மின் தடை காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்தச் சூழலில், நாட்டில் நிலக்கரி உற்பத்தியைப் பெருக்கும் வகையில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் பேரில், நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்துக்கான நடைமுறைகளில் தளா்வு அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையையும் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

அதில், ஏற்கெனவே இயங்கி வரும் நிலக்கரி சுரங்கத் திட்டங்களில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 50 சதவீத அளவுக்கு விரிவுபடுத்திக்கொள்வதற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தீா்மானத்துள்ளது. இந்த சிறப்புத் தளா்வு சலுகை 6 மாத காலத்துக்கு வழங்கப்படும். மேலும், இந்த தளா்வுக்கான அனுமதி வழங்கப்படும்போது நிலக்கரி தொகுப்புகளில் இருக்கும் நிலக்கரி இருப்பு மற்றும் முந்தைய சுற்றுச்சூழல் ஒப்புதல் நிபந்தனைகளுக்கு உடன்பட்ட விதம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com