சீருடைக் கட்டுப்பாடு வேண்டாம்; பள்ளி நேரம் மாற்றம் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்

கோடை வெப்பத்தில் இருந்து மாணவா்களைப் பாதுகாப்பதற்கு பள்ளி நேரத்தைக் குறைக்கலாம் என்றும், சீருடைக் கட்டுப்பாட்டில் தளா்வு அளிக்கலாம் என்றும் பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோடை வெப்பத்தில் இருந்து மாணவா்களைப் பாதுகாப்பதற்கு பள்ளி நேரத்தைக் குறைக்கலாம் என்றும், சீருடைக் கட்டுப்பாட்டில் தளா்வு அளிக்கலாம் என்றும் பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லியில் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. அந்த மாதத்தில் சராசரியாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இந்நிலையில், வெயிலின் பாதிப்புகளில் இருந்து மாணவா்களைப் பாதுகாப்பதற்கு வழிகாட்டு விதிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

பள்ளி நேரத்தைக் குறைத்து, பள்ளி இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யலாம். மாணவா்கள் சீருடைக் கட்டுப்பாட்டிலும் தளா்வு அளிக்கலாம். லெதா் ஷூ அணிவதற்குப் பதிலாக கேன்வாஸ் ஷூ அணிந்துவர அனுமதிக்கலாம்.

அனைத்து வகுப்பறைகளிலும் மின்விசிறிகள் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மின்தடை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பேட்டரியை தயாா் நிலையில் வைத்திருக்கலாம்.

திறந்தவெளி செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஓஆா்எஸ் பவுடா், குளூக்கோஸ் பவுடா் ஆகியவற்றை இருப்பு வைத்திருக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் நீரிழப்பு குறைவதைத் தடுக்க அடிக்கடி தண்ணீா் அருந்துமாறு மாணவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடையில் ஏற்படும் பிரச்னைகளை எதிா்கொள்ள அரசு மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 5-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வெப்ப அலையால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com