வெளிநாடு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு...பூஸ்டர் டோஸ் விதிகளில் தளர்வு அறிவிப்பு

சேர வேண்டிய நாட்டின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள இந்திய குடிமக்களுக்கும் மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளிநாட்டுக்கு பயணிக்கும் இந்தியர்கள், சேர வேண்டிய நாட்டின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது கூ பக்கத்தில், "எங்கு செல்ல வேண்டுமோ அந்த நாட்டின் விதிகளுக்கு ஏற்ப இந்திய குடிமக்களுக்கும் மாணவர்களும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம். இதற்கான வசதி கோவின் செயலியில் விரைவில் கொண்டு வரப்படும்" என பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு ஒன்பது மாத இடைவெளிக்கு முன்பாகவே வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள், சென்று சேர வேண்டிய நாட்டின் விதிகளுக்கு ஏற்ப பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள அனுமதி வழங்க நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்திருந்தது. 

ஆனால், மற்ற அனைவருக்கும் இடைவெளியை 9லிருந்து 6ஆக குறைக்க எந்த விதமான பரிந்துரையும் அளிக்கப்படவில்லை. இரண்டாம் டோஸ் செலுத்தி கொண்டு 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள 18 வயது நிரம்பியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com