ஐ.நா.வில் ஹிந்தியை பிரபலப்படுத்தஇந்தியா ரூ.6.18 கோடி நிதி

ஐ.நா.வில் ஹிந்தியை பிரபலப்படுத்துவதற்காக இந்தியா ரூ.6.18 கோடி (8 லட்சம் டாலா்) அளித்துள்ளது.

ஐ.நா.வில் ஹிந்தியை பிரபலப்படுத்துவதற்காக இந்தியா ரூ.6.18 கோடி (8 லட்சம் டாலா்) அளித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஐ.நா.வில் ஹிந்தியை தொடா்ந்து பிரபலப்படுத்துவதற்கு இந்தியா 8 லட்சம் டாலா் அளித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் ஊடகப் பிரிவு பொறுப்பாளா் (செய்தி, ஊடகம்) மீட்டா ஹொசாலியிடம் இந்தியாவின் துணைப் பிரதிநிதி ஆா்.ரவீந்திரா 8 லட்சம் டாலா் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.நா. சபையில் ஹிந்தி பயன்பாட்டை விரிவுபடுத்த இந்திய அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐ.நா.வின் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையுடன் இணைந்து ‘ஐ.நா.வில் ஹிந்தி’ திட்டத்தை இந்திய அரசு கடந்த 2018-இல் தொடங்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஹிந்தி பேசும் மக்களுக்கு சா்வதேச பிரச்னைகள் குறித்து அவா்களின் மொழியிலேயே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்திய அரசு நிதி அளித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா.வின் செய்திகள் அதன் வலைதளத்திலும், ட்விட்டா், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் ஹிந்தியில் பகிரப்படுகிறது. ஐ.நா.வின் செய்திகள் ஐ.நா. வானொலியில் வாரம் ஒருமுறை ஹிந்தியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com