ராஜஸ்தான்: இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் புலி

ராஜஸ்தானில் சவாய் மதோபூர் மாவட்டத்தில் ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் இறந்த நிலையில் பெண் புலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் சவாய் மதோபூர் மாவட்டத்தில் ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் இறந்த நிலையில் பெண் புலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டி-61 என்று அறியப்படும் அந்த பெண் புலியின் வயது 11 ஆகும். இந்த பெண் புலியின் உடலானது ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் 7 வது மண்டலத்தில் கண்டுடெடுக்கப்பட்டது. பின்னர் அந்த பெண் புலியின் உடலானது ராஜ்பாக் வனப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது.

டி-61 புலியின் இறப்புக்கு முதன்மையான காரணம் மிக உயரத்திலிருந்து கீழே விழுந்ததுதான் என ரந்தம்போர் புலிகள் பாதுகாப்பக இயக்குநர் சேதுராம் யாதவ் தெரிவித்தார். ஆனால், உயிரிழப்புக்கான சரியான காரணம் என்ன என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

டி-61 பெண் புலி குறித்து வன அதிகாரிகள் கூறியது, “ டி-61 புலியானது டி-8 (லட்லி)  மற்றும் டி-34 (கும்பா) ஆகியவைகளின் மகள். இந்த புலிகள் காப்பகத்தில் மண்டலம் 7 மற்றும் 8 ஆகிய இரு மண்டலங்களும் அதன் எல்லை. டி-61 புலி தனது அதிகபட்ச நேரத்தை டி-58 உடன் செலவிடும். இறந்த பெண் புலியின் இறுதி சடங்கு அதன் உடற்கூறு ஆய்விற்கு பின்னர் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும்” என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com