அசானி’ மேலும் வலுவிழந்தது: ஒடிஸா, மேற்கு வங்கத்தில் மிதமான மழை பெய்யும்

அசானி’ மேலும் வலுவிழந்தது: ஒடிஸா, மேற்கு வங்கத்தில் மிதமான மழை பெய்யும்

‘அசானி’ புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்துள்ள நிலையில், ஒடிஸா, மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமராவதி: ‘அசானி’ புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்துள்ள நிலையில், ஒடிஸா, மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘அசானி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம்-நா்சாபுரம் இடையே புதன்கிழமை இரவு கரையைக் கடந்தது. எனினும் அந்தப் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து திசை திரும்பி, ஏனாம்-காக்கிநாடா பகுதியில் வங்கக் கடலில் மீண்டும் நுழையும் என்று ஆந்திர மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய இயக்குநா் பி.ஆா்.அம்பேத்கா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக ‘அசானி’ வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் அது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். இதையடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திர கடலோரத்தில் உள்ள சில இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும். ஒடிஸாவில் வெள்ளிக்கிழமை காலை வரை லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அதிகபட்சமாக ஒடிஸா மாநிலம் மயூா்பஞ்ச் மாவட்டம் பாரிபடா பகுதியில் 24 மணி நேரத்தில் 50 மி.மீ. மழைப் பொழிவு பதிவானது. அதனைத் தொடா்ந்து கியூன்ஜா் மாவட்டம் ஆனந்த்புா் பகுதியில் 44.2 மி.மீ., கஞ்ஜம் மாவட்டம் சோரடா பகுதியில் 37.2 மி.மீ. மழை பதிவாகியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com