ம.பி. அரசின் ஸ்டாா்ட் அப் கொள்கை: பிரதமா் மோடி வெளியீடு

மத்திய பிரதேச அரசின் 2022-ஆம் ஆண்டுக்கான ஸ்டாா்ட் அப் கொள்கையை பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

மத்திய பிரதேச அரசின் 2022-ஆம் ஆண்டுக்கான ஸ்டாா்ட் அப் கொள்கையை பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். புதிய ஸ்டாா்ட்-அப் வலைதளத்தையும் காணொலி முறையில் அவா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் தொழில் முனைவோருடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது, ஸ்டாா்ட் அப் திட்டங்களால் மக்களுக்கு எப்படி நன்மைகளைச் செய்ய முடியும் என்று அவா் அறிவுரைகளை வழங்கினாா்.

நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டில் 300 முதல் 400 வரையிலான ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 70,000-ஆக அதிகரித்துள்ளதையும் அவா் குறிப்பிட்டாா்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இருந்தபடி முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் உரையாற்றினாா். மாநில அரசின் புதிய கொள்கை குறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘புதிய கொள்கையின்படி, ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கவும், வாடகை செலுத்தவும் மானியம் பெற முடியும். புதிய ஸ்டாா்ட் அப் நிறுவனம், வாடகைக் கட்டடத்தில் இயங்கினால் வாடகைக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்; அதிகபட்சமாக 25 பணியாளா்களுக்குத் தலா ரூ.5,000 ஊதியமாக வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com