அதிகரிக்கும் காவல் மரணங்கள்! தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்

இந்தியா முழுவதும் விசாரணைக் காவல், நீதிமன்றக் காவல் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
அதிகரிக்கும் காவல் மரணங்கள்! தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்

இந்தியா முழுவதும் விசாரணைக் காவல், நீதிமன்றக் காவல் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்கள் தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அந்தப் பட்டியலில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவானது மக்களுக்குப் பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளிட்டவற்றை வழங்குகிறது. கைது செய்யப்படுபவா்களுக்கு 20, 22-ஆவது பிரிவுகள் அடிப்படை உரிமைகளை வழங்குகின்றன. அப்படியிருந்தபோதிலும் மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை சில மாநிலங்களில் தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை:

நீதிமன்றக் காவல் மரணங்கள்

(மாநிலம் 2018-19 2019-20 2020-21 2021-22 (பிப். வரை))

உத்தர பிரதேசம் 452 400 443 443

மேற்கு வங்கம் 115 115 177 221

பிகாா் 114 105 156 197

மத்திய பிரதேசம் 143 143 155 176

மகாராஷ்டிரம் 149 91 130 154

பஞ்சாப் 117 93 70 133

ஹரியாணா 65 74 46 96

குஜராத் 67 53 82 96

தமிழகம் 89 57 61 93

சத்தீஸ்கா் 55 56 64 84

ராஜஸ்தான் 74 79 71 73

ஜாா்க்கண்ட் 64 43 49 72

ஒடிஸா 61 59 89 60

தில்லி 44 47 41 60

ஆந்திரம் 43 26 47 46

கேரளம் 33 27 34 37

வடகிழக்கு மாநிலங்கள் 51 50 36 36

உத்தரகண்ட் 18 24 46 23

தெலங்கானா 9 21 22 21

ஜம்மு-காஷ்மீா் 8 5 7 14

ஹிமாசல பிரதேசம் 15 7 8 7

கோவா 3 2 1 5

மற்ற யூனியன் பிரதேசங்கள் 7 3 2 3

கா்நாடகம் 1 4 3 2

விசாரணைக் காவல் மரணங்கள்

(மாநிலம் 2018-19 2019-20 2020-21 2021-22 (பிப். வரை))

மகாராஷ்டிரம் 11 3 13 29

குஜராத் 13 12 17 21

பிகாா் 5 5 3 17

வடகிழக்கு மாநிலங்கள் 11 7 4 15

ராஜஸ்தான் 8 5 3 11

உத்தர பிரதேசம் 12 3 8 8

மத்திய பிரதேசம் 12 14 8 8

கா்நாடகம் 7 4 5 7

பஞ்சாப் 5 6 2 6

தெலங்கானா 0 0 1 4

தமிழகம் 11 12 2 4

கேரளம் 3 2 1 4

ஜாா்க்கண்ட் 3 2 5 4

ஹரியாணா 7 3 3 4

மேற்கு வங்கம் 5 7 8 3

உத்தரகண்ட் 2 1 1 2

ஒடிஸா 4 6 4 2

சத்தீஸ்கா் 3 3 3 2

ஜம்மு-காஷ்மீா் 0 0 2 1

கோவா 0 0 0 1

தில்லி 8 9 4 1

ஆந்திரம் 5 3 3 1

மற்ற யூனியன் பிரதேசங்கள் 0 1 0 0

ஹிமாசல பிரதேசம் 1 4 0 0

தகவல்: (மக்களவையில் மாா்ச் 16-இல் தாக்கலான புள்ளி விவரம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com