மதுராவில் மசூதியை அகற்றக் கோரி வழக்கு: நீதிமன்றம் என்ன சொல்கிறது?

கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே உள்ள மசூதியை அகற்றக் கோரி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கத்ரா கேசவ் தேவ் கோயில்
கத்ரா கேசவ் தேவ் கோயில்

கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்ட ஷாஹி இத்கா மசூதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே உள்ள மசூதியை அகற்றக் கோரி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், மூன்று மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கத்ரா கேசவ் தேவ் கோயிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணர் உள்ளார்.

இவரின் நண்பர் எனக் கூறி லக்னெளவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்பட ஏழு பேர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இவர்களே வழக்கின் முதல் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்து ராணுவம் என்ற அமைப்பின் தலைவராக உள்ள மணிஷ் யாதவ், இரண்டாவது மனுதாரராகவும் மேலும் ஐந்து பேர் மூன்றாவது மனுதாரர்களாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்றாவது மனுதாரர்கள் சார்பில் மகேந்திர பிரதாப் சிங் என்ற வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார்.

இவர்கள் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1669-70 காலக்கட்டத்தில், முகலாய பேரரசு ஒளரங்கசீப் உத்தரவின் பேரில் கத்ரா கேசவ் தேவ் கோயில் வளாகத்தின் 13.37 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்ற வேண்டும். இது, பகவான் கிருஷ்ணர் பிறந்த இடம் அருகே அமைந்துள்ளது.

கிருஷ்ணரின் பக்தர்கள் என்பதால் அவரின் சொத்துகளை மீட்பதில் எங்களுக்கு உரிமை உண்டு. கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி தவறாக கட்டப்பட்டுள்ளது. சொத்துகளை பகிர்ந்து கொள்வதில் பல ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது சட்ட விரோதம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கமுடிவுக்கு வந்த அயோத்தி பிரச்னை...புதிய சர்ச்சையை கிளப்பும் வாரணாசி மசூதி வழக்கு...முழு பின்னணி...
 
முன்னதாக, வழிபாட்டு தலங்கள் சட்டத்தின்படி, இந்த வழக்கை மதுரா சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை ஏற்று கொண்டால், பக்தர்கள் இது போன்ற வேறு வழக்குகளை தொடர வாய்ப்புள்ளது என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரகள் மேல்முறையீடு செய்தனர்.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991இன் படி, அயோத்தியை தவிர்த்து மற்ற வழிபாட்டு தலங்கள் அனைத்தும் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் எப்படி இருந்துவருகிறதோ அதேபோல பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட அந்த தேதிக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறி  நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க இந்த சட்டம் அனுமதி மறுக்கிறது. 

அயோத்தியை பொறுத்தவரை இந்த சட்டம் நிறைவேற்றும்போது பாபர் மசூதி வழக்கு நிலுவையில் இருந்ததால் இந்த சட்டம் அதற்கு பொருந்தாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com