பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை குறைப்பு

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை குறைப்பு

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரித்தது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ரிசா்வ் வங்கி கேட்டுக் கொண்டது. இதேபோல், மாநில அரசுகளிடமும் வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் சில்லறை விலையில் பெட்ரோல் மீது ரூ.9.50-ம், டீசல் மீது ரூ.7-ம் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார். எனவே, பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். 

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்குள் வாங்கும் பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருள்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும்.

சில உருக்கு மூலப்பொருள்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருள்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com