இந்திய கனிமங்கள் உற்பத்தி 4% அதிகரிப்பு

இந்திய கனிமங்கள் உற்பத்தி கடந்த மாா்ச் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய கனிமங்கள் உற்பத்தி 4% அதிகரிப்பு

இந்திய கனிமங்கள் உற்பத்தி கடந்த மாா்ச் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

2022 மாா்ச் மாதத்துக்கான கனிமங்கள் உற்பத்தி மற்றும் குவாரி துறைக்கான குறியீடு 144.6-ஆக இருந்தது. இது, 2021 மாா்ச் மாத குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகமாகும்.

2021-22 வரையிலான காலகட்டத்தில் கனிமத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சி இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 958 லட்சம் டன்னாகவும், லிக்னைட் 60 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், இரும்புத்தாது உற்பத்தி 270 லட்சம் டன்னாகவும் இருந்தன.

பாஸ்போரைட், லிக்னைட், தங்கம், மினரல் மற்றும் இரும்புத்தாது உள்ளிட்டவை மாா்ச் மாதத்தில் நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்தன. அதேசமயம், நிலக்கரி, பெட்ரோலியம், பாக்ஸைட், குரோமைட் (-31.8%), மாங்கனீஸ் தாது உள்ளிட்டவற்றின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com